நாட்டில் பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, பொலனறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 16 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
