இனி இந்த விதியை மீற முடியாது! செப்டெம்பர் 20 முதல் கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை..
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் அனைத்து ஆசனங்களிலும் அமர்ந்து பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
வாகன உற்பத்தியாளர்களால் ஆசன பட்டி பொருத்தப்படாத ஆசனங்களுக்கு அவற்றை பொருத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்யும் வகையில் வெளியிடப்பட்ட 2026 ஜூன் 17ஆம் திகதி இலக்கம் 2493/19 கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்ற அனுமதி கிடைத்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், 2011ஆம் ஆண்டு ஒகஸ்ட் 3ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 1717/14 கொண்ட மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலைகள்) விதிமுறைகள் திருத்தப்பட்டு, 2025 செப்டெம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2455/29 கொண்ட வர்த்தமானி மூலம் ஆசன பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆசன பட்டிகளை பொருத்துவதற்காக 3 மாத கால சலுகை வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த சலுகைக் காலம் 2025 டிசம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
எனினும், பொதுமக்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, இந்த சலுகைக் காலம் மீண்டும் 2026 மார்ச் 20ஆம் திகதி முதல் ஜூன் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் பயணிகளும் ஆசன பட்டி அணிவது கட்டாயமாகும்.
விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ News Lankasri
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan