சர்ச்சைக்குரிய மிக் விமான ஒப்பந்தம்! முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா FCIDயில்
முன்னாள் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வரவழைக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மிக் விமான ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக, அவர் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எஃப்.சி.ஐ.டி.யில் வாக்குமூலம்
அதன்படி, சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் குறித்து அவரிடமிருந்து தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணையில் மேலும் பல மூத்த தலைவர்களும் புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோர் சமீபத்தில் இதே விசாரணை தொடர்பாக எஃப்.சி.ஐ.டி-யின் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan