தேவையான மற்றும் பொருத்தமான சலுகைகள் பெற்றுக்கொள்ளப்படும் : ஹிருனி தெரிவிப்பு
தேவையான மற்றும் பொருத்தமான சலுகைகள் பெற்றுக்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனி விஜேசிங்க (Hiruni Wijesinghe) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பெற்றுக்கொள்ளப்படாது என தமது கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் தேவையான சலுகைகளை பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
பெண்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்
நாடாளுமன்றை பார்வையிடச் சென்றிருந்த போது அவர் ஊடகங்களிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இம்முறை நாடாளுமன்றில் கூடுதல் எண்ணிக்கையிலான பெண்கள் அங்கம் வகிப்பது ஆரோக்கியமான விடயம்.
குறிப்பாக வாரிசு அரசியலில் அன்றி பெண்கள் நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்வது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா? Cineulagam

365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
