மன்னார் வைத்தியசாலையில் இறந்த இளம் தாய் : எழுத்துமூல வாக்குறுதியின் பின் கைவிடப்பட்ட போராட்டம்

Sri Lanka Police Mannar Hospitals in Sri Lanka
By Ashik Nov 21, 2024 03:53 AM GMT
Report

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று (20) மாலை 4.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் இரு அரசியல் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர்கள் இருவர் மக்களின் போராட்டத்தை தமது அரசியல் நாட கமாக வழிநடத்திச் சென்ற நிலையில் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 

நாடாளுமன்றில் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை..!

நாடாளுமன்றில் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை..!

பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு

தாயின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் ,தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றது.


போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குள் போராட்டகாரர்கள் நுழைய முற்பட்ட நிலையில் கலவரம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் கலகம் அடக்கும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை ஏற்படவில்லை.

போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் மன்னார் பொது வைத்தியசாலை முன் வீதியையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசேட குழு பிரதிநிதிகள் அடங்கலாக உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள், சட்டத்தரணிகள் ,மத தலைவர்களை உள்ளடக்கி விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

வீதியூடான போக்குவரத்து பாதிப்பு

குறித்த கலந்துரையாடல் சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்றது. கலந்துரையாடலின் போது குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் உயிரிழக்கும் வரை அங்கு நிகழ்ந்த சம்பவங்கள், உயிரிழந்த பெண்ணின் தாயாரால் குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது.

மேலும் இம்மரணங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார்.இதன் போது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுத்து மூலம் தமது கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு குறித்த குழுவிடம் கோரிக்கை வைத்தனர். 

மன்னார் வைத்தியசாலையில் இறந்த இளம் தாய் : எழுத்துமூல வாக்குறுதியின் பின் கைவிடப்பட்ட போராட்டம் | Protest Justice For Death Of A Young Mother Mannar

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலும்,மாகாண பணிப்பாளர் தனது விசாரணை குழுவை நியமித்து மூன்று நாட்களில் தமது விசாரணையை முடிப்பதாகவும் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இந்த விடயங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாகாண பணிப்பாளர் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கினார்.

இந்த நிலையில் குறித்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து சென்றனர். எனினும் இரண்டு அரசியல் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர்கள் குறித்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மக்களை திசை திருப்பி தமது அரசியல் நாடகத்தை அரங்கேற்றினர்.

மன்னார் வைத்தியசாலையில் இறந்த இளம் தாய் : எழுத்துமூல வாக்குறுதியின் பின் கைவிடப்பட்ட போராட்டம் | Protest Justice For Death Of A Young Mother Mannar

இதனால் அங்கு மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.இந்த நிலையில் பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் இணைந்து வைத்தியசாலைக்கு முன் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பலவந்தமாக வெளியேற்றினர்.

இதனால் சில மணி நேரம் மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள ஆபத்து

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US