நாங்கள் சஜித்தின் அடிமைகள் அல்ல : ரிஷாத் பதியுதீன் பகிரங்கம்
நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமைகள் அல்லர் என்றும், அந்த அரசியல் கூட்டணியில் தாங்களும் ஒரு முக்கிய பங்காளிகள் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்த முற்போக்குக் கொள்கைகளிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது விலகிப் பயணிப்பது தனக்குப் பெருத்த கவலையளிக்கின்றது என்றும் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகலில் நேற்றுமுன்தினம்(25.10.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடந்தகால கசப்பான வரலாறு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவதற்காகக் கடந்த இரு முக்கிய தேர்தல்களிலும் தமது கட்சியின் ஆதரவாளர்கள் இரவும் பகலும் பாராது கடுமையாக உழைத்தனர் என்று நினைவூட்டிய அவர், பெருந்தொகை நிதியைச் செலவழித்து பொதுமக்களின் வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆரம்பத்தில் வெறும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பயணத்தை ஆரம்பித்து, இன்று 159 உறுப்பினர்களாகத் தனது பலத்தை உயர்த்தியுள்ளமையை இதன்போது சுட்டிக்காட்டினார்.
இனவாதம் மற்றும் மதவாதமற்ற கொள்கை நிலைப்பாடும், நாட்டில் உண்மையான கட்டமைப்பு மாற்றம் ஏற்படும் என்ற மக்களின் நம்பிக்கையுமே அவரது இந்த அபார வெற்றிக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த ரிஷாத் பதியுதீன் எம்.பி., தற்காலிக பின்னடைவுகள் ஏற்படினும் அடிப்படைச் சரியான கொள்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டாம் எனத் தான் சஜித் பிரேமதாசவிடம் நேரடியாகவே வலியுறுத்தினார் என்றும் கூறினார்.
இலங்கையின் கடந்தகால கசப்பான வரலாறு நாட்டு மக்களுக்குத் தெளிவான பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், இனவாதமும் மதவாதமும் இந்த நாட்டுக்கோ, சமூகத்துக்கோ அல்லது எதிர்கால சந்ததியினருக்கோ எவ்வித நன்மைகளையும் வழங்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் தமக்குத் தொடர்ந்தும் அதிருப்தியையே ஏற்படுத்தி வருகின்றது என்றும் ரிஷாத் பதியுதீன் எம்.பி. மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதெல்லாம் நிக்காது, எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது! தனுஷ் பற்றி துரைமுருகன் Cineulagam
விரைவில் திருமணம் செய்யப்போகும் காவ்யா மாறன்-அனிருத் சொத்து மதிப்பு... எத்தனை கோடிகள் தெரியுமா? Cineulagam
தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri