திருகோணமலை மாவட்டத்தில் நீர் வெட்டு: வெளியான அறிவிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நீர் துண்டிக்கப்படும் என நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் எஸ்.ஜயந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை- கந்தளாய் குளத்திலிருந்து நீர் சுத்திகரிப்புக்காக நீர் பெறப்படும் இடத்தில் (INTAKE) பராமரிப்பு சுத்தப்படுத்தும் வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நீர் விநியோகம் தடை
இதனால் பகல் நேரங்களில் முற்றாக நீர் வளங்கள் தடைப்படும் எனவும், இரவு நேரங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, ஆண்டாங்குளம், நிலாவளி மற்றும் திருகோணமலை பட்டணமும் சூழலும் போன்ற பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்படும் எனவும் அவ்வேளையில் இரவு வேளைகளில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இதனால் நீரை
சிக்கனமாக பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய
முகாமையாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.