குளங்களிலிருந்து மணலை கழுவி விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கம்
கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் தேவையை நிறைவு செய்யும் வகையில் குளங்களிலிருந்து மணலை கழுவி விற்பனை செய்வதற்கு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நேற்றைய தினம் (03.11.2026) நீக்கப்பட்டுள்ளது.
இரணைமடுகுளம் மற்றும் பல்லவராயன்கட்டு குளம் ஆகியவற்றிலிருந்து கழுவி எடுக்கப்பட்ட மணலை வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கும், ஏனைய மணல் தேவை உடையவர்களுக்கும், குறைந்த விலைகளிலே வழங்குவதற்கான அனுமதிகளை கரைச்சி பிரதேசசபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகியவற்றிக்கு வழங்கப்பட்டிருந்தன.
வழக்கு தாக்கல்
இந்த நிலையில் குளங்களிலிருந்து கழுவி எடுக்கப்பட்ட மணல் விநியோகிப்பதற்கான தடை உத்தரவு கோரி தனிநபர் ஒருவரால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூலம் கடந்த மாதம் ஏழாம் திகதி முதல் இன்று வரை மணல் வினியோகத்திற்கான இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதி G.கருணாகரன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இடைக்கால உத்தரவு நீக்கம்
எதிர்மனுதாரர்களான பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் மாவட்ட செயலாளர் கரைச்சி மற்றும் பூநகரி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் செயலாளர்கள் முன்னிலையாகி இருந்ததுடன் எதிர்மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சட்டத்தரணி சயந்தன் தலைமையிலான குழுவினரும், அரச அதிகாரிகள் சார்பில் அரச சட்டத்தரணியும் முன்னிலையாகியதுடன் வாத பிரதிவாதங்களை முன் வைத்திருந்தனர்.
குறித்த வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 05 திகதி வழங்கப்பட உள்ளதுடன் இன்று வரை பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவும் நீக்கப்பட்டுள்ளது.