பல பகுதிகளில் சீரற்ற காலநிலை: 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, கண்டி, ஹம்பாந்தோட்டை, கேகாலை, குருணாகல், மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய வலயம்
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 14,225 வீடுகள் மற்றும் கட்டடங்கள் மண்சரிவு அபாய வலயத்தில் அமைந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ளன.
சுமார் 5 ஆயிரம் வீடுகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மழைவீழ்ச்சி
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடிய சாத்தியம் உள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடிய சந்தர்ப்பங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
