மூன்று மாதங்களுக்கு அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இல்லை

Ranil Wickremesinghe Ranjith Siyambalapitiya Sri Lanka Economic Crisis Government Employee Budget 2024 - sri lanka
By Benat Nov 15, 2023 10:42 AM GMT
Report

நாட்டில் உள்ள 13 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு நாம் மாதாந்தம் 93 பில்லியன் ரூபாவை சம்பளமாக வழங்குகின்றோம். தற்போது மேலும் கொடுப்பனவு 10ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதற்காக மேலும் 13 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அரச ஊழியர்களுக்கான அந்த 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை வழங்க முடியாது.  ஆனால், அந்த  நிலுவை கொடுப்பனவுகள் அனைத்தும் வருட இறுதியில் வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வரிகளை குறைக்குமாறு கோரிக்கை 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியினால் இம்முறை புரட்சிகரமான வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2,851 பில்லியன் ரூபாவை வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையாக முன்னெடுப்பதே எமது எதிர்பார்ப்பு.

மூன்று மாதங்களுக்கு அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இல்லை | Sri Lanka Government Employee Salary

அண்மைக்காலங்களில் பல்வேறு குழுக்கள் நிதியமைச்சுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தின. அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் 10 தொழிற்சங்கங்களும் உள்ளடங்கும். தொழிற்சங்கங்கள் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தன. மற்றுமொரு குழு சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் வரிகளை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.

ஒருபுறம் தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்பை கோரியபோது மறுபுறம் வர்த்தகர்கள் வரிக் குறைப்பை கோரினர். இது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக அமைந்தது. எனினும் ஜனாதிபதி அந்த சவாலை வெற்றி கொண்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் காலம் அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் காலம் அறிவிப்பு

ஒரு வருடத்திற்கு முன்னர் நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தபோது கணிசமான அளவு சம்பள அதிகரிப்பை வழங்குவதாக தெரிவித்தார். அதன்படி இம்முறை பத்தாயிரம் ரூபா அதிகரிப்பை வரவு செலவு திட்டத்தின் மூலம் முன் வைத்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஜனாதிபதியின் யோசனை 

நாட்டிலுள்ள 13 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு நாம் மாதாந்தம் 93 பில்லியன் ரூபாவை சம்பளமாக வழங்குகின்றோம். தற்போது மேலும் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பு இடம்பெறும் போது அதற்காக மேலும் 13 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது.

அரச ஊழியர்களுக்கான 10ஆயிரம் ரூபா அதிகரிப்பை முதல் மூன்று மாதங்களுக்கு எம்மால் வழங்க முடியாமைக்குக் காரணம், எமது வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே வரி வருமானம் கிடைக்கின்றது. குறிப்பிட்ட தினத்திலேயே அது கிடைக்கும். எனினும் அந்த நிலுவை வருட இறுதியில் வழங்கப்படும்.

மூன்று மாதங்களுக்கு அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இல்லை | Sri Lanka Government Employee Salary

அதேவேளை ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவையும் அரசாங்கம் அதிகரித்துள்ளது. அது பெரும் புரட்சிகரமான செயற்பாடாகும்.

அரசாங்கம் என்ற வகையில் நாம் தேசிய வருமான வரி திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் சுங்கத்திணைக்களத்திற்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். நாம் கடந்த வாரமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். வருமான அதிகார சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் அதன் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

அடுத்ததாக சுற்றுலாத்துறை நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு துறை என்பதால் அந்த துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி கேகாலை மாவட்டத்தில் பின்னவல, கிதுல்கல போன்ற சுற்றுலாப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.

எனவே தொடர்ந்தும் ஏனைய நாடுகளில் தங்கியிருக்கும் நாடாக நாம் முன் செல்ல முடியாது. அந்த வகையில் இம்முறை வரவு செலவுத் திட்டம் புரட்சிகரமான ஒரு வரவு செலவுத் திட்டம் என்றே குறிப்பிட முடியும்  என குறிப்பிட்டார்.   

இலங்கையர்கள் சந்திக்கப் போகும் மிகக் கடினமான காலம்: ரணிலின் பகிரங்க அறிவிப்பு

இலங்கையர்கள் சந்திக்கப் போகும் மிகக் கடினமான காலம்: ரணிலின் பகிரங்க அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலின் நிலைப்பாடு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலின் நிலைப்பாடு


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US