கனடாவில் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பில் அந்நாட்டு சுகாதார திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சில வகை மருத்துவ சாதனங்களின் ஊடாக உயிரிழப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உறக்கமின்மை பிரச்சினையினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒமினிலெப் அட்வான்ஸ்ட் (OmniLab Advanced) என்ற கருவி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தையிலிருந்து மீளப்பெறல்
இவ்வாறு சில வகை மருத்துவ சாதனங்கள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் பயன்படுத்தும் சில மருத்துவ சாதனங்களைப் போன்றே, சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் கருவிகள் சிலவும் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப் படுவதாக கூறப்பட்டுள்ளது.
கனேடிய சுகாதார திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கையின் பிரகாரம் மருத்துவ சாதனங்களை பயன்படுத்துவதனை முடிந்தளவில் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
