இஸ்ரேல் இராணுவத்தின் கோரமுகம்: காசாவின் முக்கிய பகுதியிலிருந்து வெளியேறும் படைகள்
இஸ்ரேல் இராணுவத்தின் 98வது படைப்பிரிவின் வெளியேற்றத்திற்கு பிறகு காசா மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி வந்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என ஐ.நா மனித உரிமை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜெரமி குற்றம் சுமத்தியுள்ளார்.
காசாவின் - கான் யூனிஸில் வீடு என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை எனவும் அவர் கவலை வெளியிட்டள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“எல்லாம் அழிக்கப்பட்டு விட்டது. வீதிகளும் நாசம் செய்யப்பட்டிருக்கிறது. பள்ளிகளும், மருத்துவமனைகளும் மட்டும் எஞ்சி இருக்கிறது.
ஹமாஸின் கோட்டை
ஆனாலும், அவை கடுமையான சேதமடைந்திருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் இந்த நகரின் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. இது ஹமாஸின் கோட்டை என்று இஸ்ரேல் கூறியது.
எனினும் அதற்கான ஆதாரங்கள் ஏதும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இன்று இஸ்ரேலின் 98வது படை இங்கிருந்து திரும்பப்பெறப்பட்டிருப்பது போர் நிறுத்தத்தை சாத்தியப்படுத்துவதற்கு கிடைத்த முக்கிய வெற்றி என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஒரு போர் என்னவெல்லாம் செய்யும் என்பதை இந்த நகரத்தை பார்த்து உணர்ந்துவிட முடியும்” என்றார்.
இஸ்ரேல்(Israel) மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக காசாவின் கான் யூனிஸ்(Khan Yunis) பகுதியிலிருந்து இஸ்ரேல் தனது படைகளை திரும்ப பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தனது செந்த இடங்களுக்கு திரும்பும் பொதுமக்கள் வீடுகளை இழந்து அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் தாக்குதலில் அவர்களின் வீடுகள் முற்றாக அழிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தனது போர் நகர்வில் இருந்து பின்வாங்க மறுத்திருந்தார்.
கடும் எதிர்ப்பு
காசாவில் ஹமாஸ் படையை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று அவர் எச்சரித்திருந்தார்.
இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் நாட்டு மக்களே இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.நாவின்(UN) வலியுறுத்தலுக்கு அமைய போர் நிறுத்தம் குறித்து சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்தை கொண்டுவரும் போதெல்லாம் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்து வருகிறது.
போர் நிறுத்த தீர்மானம்
அமெரிக்கா(America) கொண்டுவந்த போர் நிறுத்த தீர்மானம் வெற்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அதே நேரம், இஸ்ரேலுக்கு தற்போதுவரை அமெரிக்கா ஆயுதங்களை தொடர்ந்தும் வழங்கி வருகிறது.
காசா யுத்தத்தில் இதுவரை 33,000ற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. போர் தாக்குதல்களால் பலர் கொல்லப்பட்டாலும், போர் ஏற்படுத்தியுள்ள உணவு தட்டப்பாட்டால் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில், சர்வதேச நாடுகள் அனுப்பிய உணவு, மருந்து பொருட்கள் எகிப்தின் ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், போரில் பட்டினியை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்துவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |