ஆப்பிரிக்காவில் படகு மூழ்கியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவின் மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில் படகு ஒன்று மூழ்கியதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நம்புலா கடற்கரையிலிருந்து மொசாம்பிக் தீவுக்கு படகு பயணித்தபோதே தெரிகிறது. கப்பலில் இருந்ததாக நம்பப்படும் சுமார் 130 பேரில் ஐந்து பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாகாணத்தில் வாந்திபேதி நோய் பரவியதை அடுத்தே அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர் என்று நம்புலா மாநில செயலாளர் ஜெய்ம் நெட்டோ கூறியுள்ளார். இறந்தவர்களில் பல குழந்தைகளும் அடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பொருத்தமில்லாமல் இருந்ததாலும் அது மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
படகு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தென்னாப்பிரிக்காவின் பல நாடுகளில் பரவிய வாந்திபேதி நோயால் நம்புலா மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
30 இறப்புகள்
யுனிசெஃப் தகவல்படி, தற்போதைய நோய் தாக்கம், கடந்த 25 ஆண்டுகளில் மிக மோசமானது.
இந்தநிலையில் கடந்த 2023 அக்டோபர் முதல், மொசாம்பிக்கில் 13,700 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 30 இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஏறக்குறைய 400 ஆண்டுகளாக, மொசாம்பிக் தீவு போர்த்துகீசிய கிழக்கு ஆப்பிரிக்காவின் தலைநகராக இருந்தது, இந்தநிலையில் தீவு அதன் காலனித்துவ கட்டிடக்கலை மற்றும் ஒரு வர்த்தக வரலாற்றுக்காக யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |