பங்களாதேஷ் தேசியவாதக் கட்சிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து தெரிவிப்பு
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (BNP) தலைவருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துச் செய்தி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது X தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பங்களாதேஷ் மக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக அவர்களை நான் வாழ்த்துகிறேன்.
Sri Lankan President Anura Kumara Dissanayake congratulated the people of Bangladesh for reaffirming their faith in democracy and extended his congratulations to Tarique Rahman for leading the BNP in the elections.
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) February 13, 2026
🇱🇰🇧🇩
He said the results reflect the trust placed in… pic.twitter.com/AvvCQN4TWE
மேலும் இந்தத் தேர்தல்களில் பங்களாதேஷ் தேசியக் கட்சியை வழி நடத்திய தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் முடிவுகள் அவர் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன. இலங்கை-பங்களாதேஷ் உறவுகளை வலுப்படுத்த நான் எதிர்பார்த்துள்ளேன், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam