13 ஆவது திருத்தச் சட்டம்: முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகமவின் சர்ச்சைக்குரிய பேச்சு
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்துமாறு முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் போராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எழுதிய 'The Sri Lanka Peace Process' என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
மாதாந்த சஞ்சிகையான புதிய அரசியலமைப்பு
இன்று நாம் ஏன் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் விவாதிக்க கூடாது. நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட இந்த சட்டத்தை பொறுப்புடன் விவாதித்து, முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதி பகுதியாவது நடைமுறைப்படுத்துவதற்காக ஏன் நாங்கள் முன்வருவதில்லை.
இது தொடர்பிலான குறுகிய மனப்பான்மையை தள்ளி வைத்துவிட்டு இதை ஓரளவாவது செயற்படுத்துவதற்கான திசையை நோக்கி நகர்த்துவோம். இவைகள் இருக்கும் நிலையில் வேறு ஏதோ ஒன்றை தேடுகின்றோம்.

இன்று புதிய அரசிலமைப்புச் சட்டம் தொடர்பில் பேசுகின்றனர்.வேறு எந்த நாட்டிலும் இப்படி அரசிலமைப்புச் சட்டம் மாற்றப்படுமா என்று நினைக்கிறேன். அரசிலமைப்புச் சட்டத்திருத்தத்தை மாதாந்த சஞ்சிகையாகியுள்ளனர்.

மீண்டும் நாம் பலன் தராத ஒரு பயணத்திற்கு காலடியெடுத்து வைக்கிறோமா என தோன்றுகிறது. இன்றைய நிலையில் யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் எங்களுக்கு கடந்தகால கசப்பான நினைவுகளை ஞாபகப்படுத்துகிறது.
எங்களுக்கு ஒரு பொறுப்புணர்வு உள்ளதால்,புதிய அரசியலமைப்பு என தேவையற்றதை விட்டு விட்டு இருப்பதை செயற்படுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri