கஸ்ஸப தேரரால் நாட்டில் ஏற்படப்போகும் குழப்பம்! கெஸ்பேவ நகர சபையில் ஒலித்த இனவாத கோசம்
கஸ்ஸப என பெயரை குறிப்பிட்டு கஸ்ஸப தேரருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக கெஸ்பேவ நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் சபையில் நேற்று (12.02.2026) பதற்றம் ஏற்பட்டது.
சபையில் ஏற்பட்ட குழப்பம்
கெஸ்பேவ நகர சபையின் ஆட்சி தேசிய மக்கள் சக்தியின் கீழ் உள்ளது. அதன் சபை நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமான நிலையில்,சபையில் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் கஸ்ஸப தேரரின் பெயரை குறிப்பிட்டு அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக சர்வஜன கட்சியின் உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.
அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாங்கள் சிங்கள பௌத்த தர்மத்துக்கும் பௌத்த பிக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள்.

கஸ்ஸப தேரர் நாட்டின் சிங்கள பௌத்த மக்களுக்காக போராடியவர். அவருக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் பேசியதை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு கடும் இனவாத உரையை நிகழ்த்திவிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்துள்ளனர்.
அதன் பின்னர் கெஸ்பேவ நகர சபைக்கு முன்னால் பதாதைகளை ஏந்தியவாறு ஏழு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam