இலங்கை ஜனாதிபதி தெரிவில் அமெரிக்கா - இந்தியா இடையில் பனிப்போர் (VIDEO)
இலங்கை ஜனாதிபதி தெரிவில் அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது கடும் பனிப்போர் நிலவி வருவதாக அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தீவு இந்துமா சமுத்திரத்தின் மையத்தில் உள்ளமையினால் இந்துமா சமுத்திரத்தின் அச்சாணியாக உள்ளதுடன், இந்துமா சமுத்திரத்தினை மையப்படுத்தி இந்த நூற்றாண்டின் அரசியல் நகரப்போவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய,இலங்கை ஜனாதிபதி தெரிவில் அமெரிக்கா தற்போது நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதுடன்,இந்துமா சமுத்திரத்தின் அச்சாணியான இலங்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க இறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,இலங்கையுடன் ஒட்டிப்பிறந்த குழந்தை என்ற வகையில் இந்தியாவின் பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் இலங்கையின் ஜனாதிபதி தெரிவில் இந்தியாவின் தலையீடு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,