நேட்டோ கூட்டை முடக்கும் சுவிட்சர்லாந்தின் கடுமையான நடுநிலை வரைவு - வாக்காளர்கள் நிராகரிப்பு
சுவிட்சர்லாந்து சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை விதிப்பதையோ அல்லது நேட்டோ (NATO) அமைப்புடன் இணைந்து செயற்படுவதையோ தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட கடுமையான நடுநிலை விதிகளுக்கான முன்மொழிவை அந்த நாட்டு வாக்காளர்கள் உறுதியாக நிராகரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்று(27.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசாங்கத்தின் தற்போதைய நடுநிலைக் கொள்கையை மேலும் இறுக்கமாக வரைறுத்து அரசியலமைப்பில் சேர்க்கக் கோரி வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி (SVP) இந்த வாக்கெடுப்பைக் கொண்டு வந்தது.
எனினும், வாக்களித்த மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் இதற்கு எதிராக வாக்களித்துள்ளதாக அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.
வாக்கெடுப்பின் முடிவுகள்
ரஷ்யா மீது தடைகளை விதித்ததன் மூலம் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய நடுநிலைமை சீர்குலைந்துள்ளதாக SVP கட்சி குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது நாட்டின் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் என்றும் சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்தை தனிமைப்படுத்தும் என்றும் அரசாங்கமும் பிற முக்கிய கட்சிகளும் எச்சரித்திருந்தன.

வாக்கெடுப்பின் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள SVP கட்சித் தலைவர்கள், தங்களது தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவும், இருப்பினும் நடுநிலைமையைப் பேணுவதில் அனைத்துத் தரப்பினரும் காட்டிய அர்ப்பணிப்பு ஊக்கமளிப்பதாகக் கூறியுள்ளனர்.
மேலும், அரசாங்கம் நடுநிலைக் கொள்கையிலிருந்து விலகினால் மீண்டும் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் வசூலைக் குவிக்குமா போராட்டம் திரைப்படம்..! கிளிநொச்சி சிறப்புத் திரையிடலில் கிடைத்த வரவேற்பு