சென்னையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பெங்களூரு: கண்ணீர் சிந்திய விராட் கோஹ்லி
பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நேற்று (18) நடைபெற்ற 17ஆவது ஐபிஎல்தொடரின் 68ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றிகொண்டது.
மேலும் விராட் கோஹ்லி, வெற்றியின் மகிழ்வில் கண்ணீர் சிந்திய விடயம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வெற்றியுடன் நான்காவதும் கடைசியுமான அணியாக ப்ளே ஓவ் சுற்றில் விளையாடும் தகுதியை றோயல் செலஞ்சர்ஸ் பெற்றுக்கொண்டது.
விராட் கோஹ்லி, பவ் டு ப்ளெசிஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டம் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றின.
நிகர ஓட்ட வேக அடிப்படை
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 219 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.
இப் போட்டி முடிவுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் தலா 14 புள்ளிகளைப் பெற்றிருந்த போதிலும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ப்ளே ஒவ் வாய்ப்பை உறுதிசெய்துகொண்டது.
Look what we made of that 1% chance ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvCSK
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 18, 2024
pic.twitter.com/1blwgwHm8p
சென்னை சுப்பர் கிங்ஸின் வெற்றி இலக்கு 219 ஓட்டங்களாக இருந்தபோதிலும் ப்ளே ஒவ் வாய்ப்பை பெறுவதற்கு அவ்வணிக்கு 201 ஓட்டங்களே தேவைப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
