ஈழத்தமிழினத்துக்கு பெருமை சேர்த்த யாழ்.இளைஞன் வியாஸ்காந்த்

Jaffna Sri Lanka Cricket Sports IPL 2024
By Kajinthan May 14, 2024 08:57 AM GMT
Report

இலங்கை டி20 (T20) அணியின் மேலதிக வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வியாஸ்காந்த் (V. Viyaskanth) தெரிவு செய்யப்பட்டுள்ளமை மிகவும் பெருமைக்குரியது என யாழ்.மத்திய கல்லூரி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. 

வியாஸ்காந்த், தனது ஆரம்ப கல்வியை யாழ்.மத்திய கல்லூரியில் ஆரம்பித்ததில் இருந்து கிரிக்கெட்டில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்ததாக அவரின் பெற்றோரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆரம்பத்தில் இவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதனை கண்டித்த இவரது தாயார் கல்வியில் அக்கறை செலுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

வியாஸ்காந்தினால் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க முடியும்: இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு விளக்கம்

வியாஸ்காந்தினால் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க முடியும்: இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு விளக்கம்


பாடசாலை மட்ட போட்டிகள் 

இருப்பினும், அவருக்கு கிரிக்கெட் மீது காணப்பட்ட அளப்பரிய ஈடுபாடு காரணமாக தனது தந்தையின் ஆதரவுடன் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 


இந்நிலையில், வியாஸ்காந்த், தனது 10ஆவது வயதிலேயே 13 வயதிற்குட்பட்ட பாடசாலை கிரிக்கட் அணியில் பங்குபற்றி தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். 

ஈழத்தமிழினத்துக்கு பெருமை சேர்த்த யாழ்.இளைஞன் வியாஸ்காந்த் | Viyaskanth Lpl Sun Risers Hyderabad From Jaffna

இதனைத் தொடர்ந்து, 15 வயதுப்பிரிவு ,17 வயதுப்பிரிவு என படிப்படியாக முன்னேறி தனது 18ஆவது வயதில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடும் போது இலங்கை கிரிக்கட் அணியில் சிறப்பு வீரராக விளங்கிய குமார சங்கக்காரவின் (Kumar Sangakkara) பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜேம்ஸ் அண்டர்சன்

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜேம்ஸ் அண்டர்சன்

 

முதலாவது டி20 போட்டி

மேலும், இலங்கை பாடசாலைகள் சார்பிலான 19 வயதிற்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டதோடு அதில் ஆப்கானிஸ்தான் (Afghanistan) அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். 

viyaskanth-lpl-sun-risers-hyderabad-from-jaffna-

இதனைத் தொடர்ந்து, இவர் 2020 டிசம்பரில் இலங்கை பிரீமியர் லீக் (Sri Lanka Premier League) சுற்றில் ஜப்(ஃ)னா ஸ்டேலியன்ஸ் (Jaffna stallions) அணிக்காக தனது முதலாவது டி20 போட்டியில் விளையாடியதோடு கடந்த 3 வருடங்களாக அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

மேலும், இவர் தனது முதலாவது முதல் தரப் போட்டியை 2023 செப்டம்பரில் தமிழ் யூனியன் அணிக்காக நொன்டெசிக்ரிப்ட் (Nondescript) அணிக்கு எதிராக விளையாடினார். 

அம்பாந்தோட்டை கிரிக்கட் மைதானம் தோல்வியடைந்த திட்டம்: ஏற்றுக்கொண்ட அரசாங்கம்

அம்பாந்தோட்டை கிரிக்கட் மைதானம் தோல்வியடைந்த திட்டம்: ஏற்றுக்கொண்ட அரசாங்கம்


ஐ.பி.எல் தொடர் 

அதேவேளை, இவ்வருட ஐபிஎல் (IPL) தொடரிலிருந்து வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga), சன் ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH) அணியிலிருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் அணி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

viyaskanth-lpl-sun-risers-hyderabad-from-jaffna-

இதனைத் தொடர்ந்து, அவரின் வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் முகமாக சன் ரைசர்ஸ் அணிக்காக வியாஸ்காந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   

சன் ரைசர்ஸ் அணிக்காக தனது முதலாவது போட்டியில் களமிறங்கிய வியாஸ்காந்த், விக்கெட் எதனையும் பெறாவிட்டாலும் சிறப்பாக பந்து வீசி மிகவும் குறைந்தளவான ஓட்டங்களையே விட்டுக்கொடுத்தார்.

viyaskanth-lpl-sun-risers-hyderabad-from-jaffna-

இந்நிலையில், வியாஸ்காந்த்தின் இந்த வளர்ச்சி, தங்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக யாழ்.மத்திய கல்லூரி சமூகத்தினர், வியாஸ்காந்த்தின் பெற்றோர் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை இணைவதை கடுமையாக எதிர்க்கும் அண்டை நாடு

பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை இணைவதை கடுமையாக எதிர்க்கும் அண்டை நாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US