அம்பாந்தோட்டை கிரிக்கட் மைதானம் தோல்வியடைந்த திட்டம்: ஏற்றுக்கொண்ட அரசாங்கம்
அம்பாந்தோட்டை கிரிக்கட் மைதானம் தோல்வியடைந்த திட்டம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernand) இதனை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தள்ளார்.
குறித்த திட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கிண்ணக் கிரிக்கெட்
எவ்வாறாயினும், அரசாங்கம் என்ற ரீதியில், திட்டத்திற்காக செலுத்த வேண்டிய எந்தவொரு பணமும் செலுத்தப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை பிரத்தியேகமாக நடத்துவதற்கு இலங்கைக்கு ஐந்தாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஹோமாகமவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்று அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச(Chamal Rajapaksa) அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை நியாயப்படுத்தியுள்ளார்.
மேலும், திட்டப்பணிகள் முறையாக நிர்வகிக்கப்படாததே பிரச்சினையாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |