உலகக்கிண்ணம் நெருங்கவுள்ள நிலையில் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள முக்கிய முடிவு
இந்த ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு20 (T20 World Cup 2024) உலகக்கிண்ண போட்டியில் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ள தினத்துக்கு மாற்று தினம் ஒன்று வழங்கப்பட மாட்டாது என சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் (ICC) தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் மழை குறுக்கிட்டால் 4 மணிநேரம் மட்டுமே கூடுதல் நேரம் வழக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருபதுக்கு20 உலகக்கிண்ண தொடர் ஜூன் 2ஆம் திகதி தொடங்கி ஜூன் 29ஆம் திகதி வரை ஐக்கிய அமெரிக்கா (United Stetes of America) மற்றும் மேற்கிந்திய தீவுகளில் (West Indies) நடைபெறவுள்ளது.
இறுதிப்போட்டி
முன்னதாக, அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால் போட்டியை நடத்த மாற்று திகதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், இரண்டாவது அறையிறுதி போட்டி, ஜூன் 27ஆம் திகதி முடிவடைந்து இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் திகதி ஆரம்பிக்க இருப்பதால் இரண்டாவது அரையிறுதிக்கு மாற்று தினம் ஒன்றை வழங்குவதற்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலதிக நாள்
அவ்வாறு மாற்று திகதியாக அடுத்த நாள் வழங்கப்படின், இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாட 24 மணி நேரம் கூட ஓய்வு இருக்காது.

இதன் காரணமாகவே இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு மேலதிக நாள் ஒன்று வழங்கப்படவில்லை என கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri