உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தால் ஏற்பட்ட கலவரம்:குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதி போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இந்நிலையில், சுமார் 14,000 பொலிஸார் பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டிக்கு பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் தேர்வாகியுள்ளன.
அரை இறுதிப் போட்டியில் மொராக்கோ அணியை தோற்கடித்து பிரான்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
14,000 பொலிஸார் குவிப்பு
இந்த இறுதி போட்டியை காண பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் மாண்ட்பெல்லியர் பகுதிகளில் திரண்ட இரு அணிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்கள் அணிக்கு ஆதரவாக முழக்கமிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரான்சில் மொராக்கோ மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது.
தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத மொராக்கோ இரசிகர்கள் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
இதன்போது பிரான்சில் பொலிஸார் மீதும் இரசிகர்கள் கற்களை வீசியுள்ளனர்.
இதேவேளை பெல்ஜியத்தில் பொலிஸார் மீது மொராக்கோ இரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டும் வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சுமார் 14,000 பொலிஸார் பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுப்பட்டுள்ள ரசிகர்கள் அங்காடிகளை சேதப்படுத்தியதாகவும், வாகனங்களுக்கு நெருப்பு வைத்தாகவும் முறைப்பாடுகள் எழுந்ததை தொடர்ந்து, பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
வெற்றி கொண்டாட்டம்
இந்த போட்டியின் வெற்றியை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு பணிகளில் பிரான்ஸ் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸின் கடந்த காலங்களில் 1998 மற்றும் 2018ம் ஆண்டு உலக கோப்பை வெற்றியின் போது சாம்ப்ஸ்-எலிசீஸ் அவென்யூ பகுதியில் பெருவாரியான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 600,000 ரசிகர்கள் இந்த பகுதியில் குவிந்து ஆரவாரம் செய்தும், நடனமாடியும் கொண்டாடியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இந்த பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் 2,750 அதிகாரிகள் அருகில் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.