உலகக் கிண்ண கால்பந்தாட்டம்:தோல்வியால் வெடித்த வன்முறை
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி அல் பெய்த் விளையாட்டரங்கில் நேற்று(14.12.2022) இரவு நடைபெற்றது.
தோல்வியை ஏற்றுக்கொள்ளாத இரசிகர்கள்
இந்த அரை இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியிடம் மொராக்கோ அணி தோல்வியை தழுவியது.
இதனையடுத்து தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத மொராக்கோ இரசிகர்கள் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
இதன்போது பிரான்சில் பொலிஸார் மீதும் இரசிகர்கள் கற்களை வீசியுள்ளனர்.
பொலிஸார் மீது வீசப்பட்ட பட்டாசுகள்
இதேவேளை பெல்ஜியத்தில் பொலிஸார் மீது மொராக்கோ இரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டும் வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதுடன் அந்த பகுதி முழுவதும் தீ பரவலடைந்துள்ளது.
இந்த நிலையில் வன்முறைகளை தடுத்த போது பொலிஸாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அங்கு வன்முறையை அடக்க கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
