விஜித ஹேரத்திற்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்திற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் மோசடி வழக்கு ஒன்று தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காக இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்
கடந்த 2010 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபை மேம்படுத்தல் பணிகளுக்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையினால் 64 மில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக, லொத்தர் சபையின் அப்போதைய தலைவர் சந்தரவன்ச பத்திராஜவிற்கு எதிராக ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்தபோது இந்த மனுவின் முறைப்பாட்டாளரான விஜித ஹேரத் நீதிமன்றத்தில் முன்னிலையாக இருந்தார்.
இன்றைய தினம் அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ள காரணத்தினால் தமது கட்சிக்காரர் வேறொரு நாளில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு விஜிதவின் சட்டத்தரணி நாமல் ராஜபக்ச கோரி இருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |