நீதிமன்றத்தின் ஊடாக அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அநுர
சட்டரீதியாக நீதிமன்றத்தின் ஊடாக அதிரடி நடவடிக்கை ஒன்றுக்கு புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தயாராவதாக இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போதைய அமைச்சரவையை கலைத்த பிறகு, புதிய அமைச்சரவைக்கான பொதுத் தேர்தலுக்கு முன்பாக நீதிமன்றத்தின் ஊடாக சட்டரீதியான நடவடிக்கை ஒன்றை அநுர மேற்கொள்ளவுள்ளார் என ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த நீதிமன்ற நடவடிக்கை நடைமுறைப்படத்தப்படும் போது, மகிந்தவின் கீழ் பணியாற்றிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் இனி புதியதொரு அரசியல் கலாசாரத்தை கொண்டுவரவுள்ள அநுரகுமார திசாநாயக்கவின் நகர்வு தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றை ஊடறுப்பு,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




