பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் வெளியான காணொளிகள் - மெட்டா தலைவருக்கு எதிராக வழக்கு பதிவு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி, மெட்டாவின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸுக்கு எதிராக ஹைதராபாத் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களுக்கு மத்தியில், பாஜக ஆதரவாளர்களின் முறைப்பாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு
இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனத்திற்கு விரைவில் அறிவித்தல் அனுப்ப உள்ளதாக ஹைதராபாத் பொலிஸ் இணையவழிக் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள மெட்டா செய்தித் தொடர்பாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட புதிய விதிகளின்படி, சட்டவிரோதமான உள்ளடக்கங்களை 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
முகப்புத்தகத்தில் பயனர் பதிவிடும் கருத்துகளுக்கு நிறுவன முகாமையாளர்கள் நேரடியாகப் பொறுப்பாக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri