வெற்றிலைக்கேணி கடற்தொழிலாளர் சங்கம் தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் தமக்கு அநீதி இழைத்துள்ளதாக கடற்றொழிலாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்களின் சமாசத்திற்குட்பட்ட அனைத்து சங்கங்களுக்கும் தலா இரண்டு படகுகள் இயந்திரத்துடன் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
குலுக்கல் முறையில் தெரிவு இடம் பெற்று இரண்டு பயனாளிகளுக்கு படகு இயந்திரத்துடன் வழங்கப்பட்டது.
அநீதி
வெற்றிலைக்கேணி மீன்பிடிச் சங்கத்திற்கு உட்பட்ட கடற்றொழிலாளர்கள் பலர் வறுமை கோட்டிற்குள் காணப்படுவதால் அவர்களை தெரிவு செய்து குலுக்கல் முறையில் அவர்களில் யாராவது இரண்டு பயனாளிகளுக்கு குறித்த படகுகளை வழங்குமாறு சங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் வெற்றிலைக்கேணி மீன்பிடிச் சங்கம் பொதுச் சபையின் தீர்மானத்தின் படி சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கி குலுக்கல் முறையில் தேர்வு செய்து இரண்டு பயனாளிகளுக்கு வழங்கியது.
நேற்று வழங்கப்பட்ட படகு கடற்தொழில் செய்யாத ஒருவருக்கும் ,ஏற்கனவே இலவசமாக சங்கத்தால் படகு வழங்கப்பட்டவருக்குமே குலுக்கல் முறையில் படகு வழங்கப்பட்டதாக கடற்றொழிலாளர் குற்றம் சாட்டுகிறார்.
குற்றச்சாட்டு
தம்மைப் போன்ற படகு வாங்க முடியாத ஏழைகள் தற்போதும் அப்பகுதியில் காணப்படுவதால் தமது கோரிக்கையை ஏற்காமல் வெற்றிலைக்கேணி மீன்பிடி சங்கம் அநீதி இழைத்துள்ளதாக தெரிவிக்கின்றார்.
வெற்றிலைக்கேணி மீன்பிடி சங்கத்தில் பொருளாளராக தான் இருக்கின்ற வேளையிலும் இடம்பெறும் கூட்டங்கள் தொடர்பாக தனக்கு அறிவிக்காமல் குறித்த சங்க உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றார்.
படகு வாங்க முடியாத நிலையிலும் மிகவும் வறுமையில் தனது குடும்பம் உட்பட பல குடும்பங்கள் காணப்படுவதால் படகு வாங்க முடியாத நிலையில் உள்ளோருக்கு இந்த படகை வழங்கமாறு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனாலும் சங்கம் தன்னிச்சையாக செயற்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
