ராஜபக்சர்களை தூக்கிலிட வேண்டும் - அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி வலியுறுத்து
இந்த நாட்டைச் சூறையாடி மோசடி செய்து குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சர்களைக் தூக்கிலிட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரான அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
ராஜபக்சர்களே காரணம்
"ஊழல், மோசடி இல்லாத ஆட்சியை தேசிய மக்கள் சக்தி நடத்தி வருகின்றது.
நாட்டைச் சூறையாடி மோசடி செய்து குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சர்கள் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.அவர்களைத் தூக்கிலிட வேண்டும்.
இந்த நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்தமைக்கு ராஜபக்சர்களே பிரதான காரணம்.
எமது ஆட்சியில் இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்பி வருகின்றோம். ஊழல், மோசடி இல்லாத மக்கள் அபிவிருத்தியே எமது நோக்கம். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" - என குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
