ட்ரம்ப் மீது சீன உளவு அமைப்புகள் குறிவைப்பு: அமெரிக்கா புலனாய்வு வெளியிட்ட திடுக்கிடும் அறிக்கை
அமெரிக்கா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தேர்தல் நடைமுறைகளில் சீனா தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயற்சிப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஜப்பான் தேர்தல் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரை இலக்காகக் கொண்டு சீனா ஒரு மிகப்பெரிய இரகசியத் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
சமூக வலைதளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் கருத்தை மாற்றியமைக்கவும், ஜனநாயக ரீதியிலான தேர்தல் முடிவுகளில் தங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கவும் சீனா இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் பாதுகாப்பு
இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது தேர்தல் பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன.
[N61UE8ஸ
வெளிநாட்டுத் தலையீடுகளைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் தேவை எனப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உலக நாடுகளின் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த சீனா இதுபோன்ற ‘தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை’ தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri