முன்னாள் அரச புலனாய்வு அதிகாரியின் கைது.. தொடர்ந்து பதற்றத்தில் இராணுவ புலனாய்வு ராயூ மற்றும் கலீல்
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது விவகாரமானது தற்போது விவதாப் பொருளாக மாறியுள்ளது.
இந்தநிலையிலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தம்மை கைது செய்வதனைத் தடுப்பதற்காக இராணுவப்புலனாய்வின் முன்னாள் கேணல் தர அதிகாரி கெலும் எதற்காக மனுவினைத் தாக்கல் செய்துள்ளார் என்கின்ற கேள்வியும் எழுகின்றது.
கைது செய்யப்பட்ட முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பிரதான சூத்திரதாரியா அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டாரா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தாக்குதலோடு தொடர்புபட்டுள்ளார் என்ற சாட்சியங்கள் இருப்பதனால் தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
எனவே, இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்தோடு, ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் பலர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரகசியத்தன்மை குற்றப்புலனாய்வு பிரிவினரின் வசம் உள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,