சரித் அபேசிங்கவிற்கு விளக்கமறியல்
நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், முன்னாள் தேசிய மக்கள் சக்தி ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் “ஹரக் கட்டாவின்” மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகிதா ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.
பிணை நிபந்தனை
ரகித ராஜபக்சவும் மற்றொரு சந்தேக நபரும் தங்களது பிணை நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னர், அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் சரித் அபேசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.