வட கீழ்ப் பருவக் காற்றின் முதற் சுற்று மழை தாழமுக்கத்துடன் ஆரம்பம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வட கீழ்ப் பருவக் காற்றின் முதற் சுற்று மழை தாழமுக்கத்துடன் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கும் முதற் சுற்றுமழை 30 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும்.அத்துடன் வடகீழ்ப் பருவக்காற்று உடைவு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இவ்வாண்டு வட கீழ்ப் பருவக்காற்றுக் காலத்தில் வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கங்கள் பெரும்பாலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரங்களிலேயே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளன.
ஆகவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாகாண நிர்வாகங்கள், மாவட்ட நிர்வாகங்கள் போதுமான தயார்படுத்தல்கள், விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்வது சிறந்தது.
காலபோக நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இந்த மழை நிலைமைகளைக் கருத்தில்கொண்டு தமது பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
