திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: சந்தேக நபர்களை துன்புறுத்தும் காணொளியால் பரபரப்பு!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் வழக்கு முடிவடைந்து தேரர்கள் உட்பட 10 சந்தேக நபர்கள் சிறைச்சாலை பஸ்ஸில் ஏறும் போது கூச்சலிட்ட சந்தேக நபர்களை சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் நடத்தும் காணொளி ஒன்றை வெளியிட்டு கலகம குசலதம்ம தேரர் (Galagama Kusaladhamma Thero) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றில் குறித்த காணொளியை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ள மேலதிக கருத்துக்கள்:
சந்தேக நபர்கள் முகம் கொடுத்த துன்புறுத்தல்கள்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழு நேற்று (09.01.2026) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றில் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. அதன் பின்னர் சந்தேக நபர்கனை சிறைச்சாலைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கையின் போது, அவர்கள் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வரும்போது ஒரு தேரர் 'பௌத்த தர்மத்துக்கா உயிரையும் கொடுப்பேன்' என அச்சுறுத்தும் தொனியில் கையை காட்டி ஊடகவியலாளர்களின் கெமராக்களுக்கு தெரிவித்தார்.
அதன் பின்ன சந்தேக நபர்கள் சிலர் சிறைச்சாலை பஸ்ஸில் ஏறும் போது கத்தி குழப்பத்தில் ஈடுட்டதால் சிறைச்சாலை அதிகாரிகளில் ஒருவர், சந்தேக நபரின் காதை திருகி பஸ்ஸில் ஏறுமாறு தள்ளும் காணொளி இன்று பேசு பொருளாக்கப்பட்டுள்ளது.
அந்த காணொளியை பார்த்த பௌத்த பிக்குகள் தெரிவித்த கருத்து,மக்கள் மத்தியில் இவ்வாறு நடந்து கொள்ளும் சிறைச்சாலை அதிகாரிகள் சிறையில் அவர்களை என்ன கொடுமைப்படுத்தவர் என தெரிவிக்கின்றனர்.
அத்தோடு அந்த அதிகாரியின் செயற்பாட்டை சக அதிகாரி ஒருவர் அவரை கண்டிப்பதையும் காணமுடிக்கிறது. இவர்களின் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
சந்தேக நபர்களை நடத்தும் சர்வதேச சட்டம் மீறப்பட்டுள்ளதாக கலகம குசலதம்ம தேரர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.




