பொலன்னறுவையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் - ஆண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை
பொலன்னறுவை - மெதிரிகிரியை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(27.06.2026) இரவு இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பினருக்கு இடையில் மோதல்
மெதிரிகிரியை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய திருமணமாகாத நபரே மேற்படி சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையில் கடந்த பல நாள்களாகத் தொடர்ச்சியாக முரண்பாடுகள் நிலவி வந்துள்ளன.
இந்த நிலையில், நேற்று இரவு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட மோதல் முற்றவே, அது கொலையில் முடிவடைந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ள 7 சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பியோடி, தலைமறைவாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்வதற்குரிய விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு, மெதிரிகிரிய பொலிஸாரால் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பாரபட்சமான நடவடிக்கை.. வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் குற்றச்சாட்டு
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam