அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 67ஆக உயர்த்த கோரிக்கை!
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்த அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்படுமாயின், ஏனைய அரச ஊழியர்களின் ஓய்யு பெறும் வயது எல்லையும் உயர்த்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மற்றும் அரை-அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொழற்சங்கங்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் தேசிய பேரவை நேற்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.

இந்தக் கோரிக்கையடங்கிய யோசனையில் உலப்பனே சுமங்கல தேரர், சமன் ரத்னப்பிரிய, ரவி குமுதேஷ், ஆனந்த பாலித, உதேனி திசாநாயக, சிந்தக்க பண்டார, பந்துல சமன் குமார, சுபுன் களுகோட்டகே, கயாமல் சுமனரத்ன, சுமேத சோமரத்ன மற்றும் சுபாஷ் கருணாரத்ன ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
சுமார் 15 லட்சம் அரசு ஊழியர்களில் ஒரு குறிப்பிட்ட சேவைப் பிரிவினருக்கு மட்டும் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு தொடர்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam