குஜராத்தில் டில்வின் சந்தித்த முக்கிய அரசியல்வாதி..
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உட்படட குழுவினர் குஜராத் மாநில முதலமைச்சர் ஸ்ரீ பூபேந்திர ரஜினிகாந்த் படேலை நேற்று (09.01.2026) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின் (ICCR) அழைப்பின் பேரிலேயே இவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.
கலந்துரையாடிய விடயங்கள்
குஜராத் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் தொழில் தொடர்பான மேம்பாடு குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.அத்தோடு இலங்கையின் தொழிசாலை, சுற்றுலா, ஆடை போன்றவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

குஜராத் மாநிலத்தின் பங்களிப்பில் கௌதம புத்தரின் புனித பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வந்து பௌத்த மக்கள் வழிபடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தமைக்கு நன்றி தெரித்ததோடு, 'டித்வா' சூறாவளியின் போது இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கும் இலங்கைக்குழு நன்றியை தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிட்னன் செல்வராஜ்,கருணாதிலன் இளங்குமரன், உள்ளக கம்பனிகள் ஊழியர் சங்கத்தின் தலைமைச் செயலாளர் கல்பனா மதுபாஷினி,மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேசக் குழுவின் உறுப்பினர் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.