தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
பேருந்து சேவை தொடர்பில் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்ற போதிலும் காட்டு சட்டங்களை ஏற்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
பொருத்தமற்ற சட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்தினால் நாடு முழுவதிலும் பஸ் சேவை ஸ்தம்பிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்கள்.. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி
போராட்டம் நடத்த திட்டம்..
நாடு முழுவதிலும் பஸ் போக்குவரத்தினை ஸ்தம்பிக்கச் செய்து போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டால் பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கெமுனு விஜேரட்ன போராட்டம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உறங்கிக் கொண்டிருக்கும் புலிகளை சீண்ட வேண்டாம் எனவும் போதைப் பொருள் பயன்பாடு குறித்து அரச பேருந்துகளிலும் பரிசோதனை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டிய நிலையில் தனியார் பேருந்துகளை மட்டும் இலக்கு வைப்பதனை ஏற்க முடியாது என கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.