கொள்கலன் விவகாரத்துக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் தொடர்பும் இல்லை : நிராகரிக்கும் அரச தரப்பு
கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களைச் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட விவகாரத்தை அடுத்தே அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைச்சு பறிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை அரசு நிராகரித்துள்ளது.
அரசு தனது இலக்குகளை விரைவாக அடையும் வகையில், மிகவும் பொருத்தமான மற்றும் அறிவியல் முறையில் அமைச்சுக்களை மறுசீரமைப்பதே அமைச்சரவை மறுசீரமைப்பின் நோக்கம் என்று தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொள்கலன்கள் விவகாரம்
கொள்கலன்கள் விவகாரம் காரணமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க துறைமுகங்கள் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், 'அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவ்வாறு நீக்கப்படவில்லை.
ஆனால், சரியான நேரத்தில் அவருக்கு இன்னும் பெரிய பொறுப்பு கிடைக்கும். இது விரைவில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
