சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை இரத்து செய்யக்கோரி, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) ஒத்திவைத்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செயற்சான்றிதழ் ஆணை பிறப்பிக்குமாறு கோரிக்கை
குறித்த மனு மீதான உத்தரவு இன்று (நவம்பர் 27) அறிவிக்கப்படவிருந்த நிலையில், நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பை 2027 ஜனவரி 28 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் தொடர்பில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து காவலில் வைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது என்று மனுதாரர் சுரேஷ் சலே குறிப்பிட்டார்.
அதன்படி, தனது காவலுக்காகப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவுகளைச் செல்லாததாக்கக் கோரி, செயற்சான்றிதழ் ஆணை பிறப்பிக்குமாறு கோரி சுரேஷ் சலே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறும் மேலதிக நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறும் அவர் இடைக்கால நிவாரணம் கோரியுள்ளார்.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 19 மணி நேரம் முன்
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri
போருக்காக அழைக்கலாம்... தயாராக இருக்க 100,000 பிரித்தானிய ரிசர்வ் படையினருக்கு அறிவுறுத்தல் News Lankasri