உக்ரைனில் போர் குற்றம் சுமத்தப்பட்ட முதல் ரஷ்யருக்கு எதிரான தீர்ப்பு விரைவில்!
உக்ரைனில் போர் ஆரம்பித்த பின்னர் நடைபெறும் முதல் போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படையெடுப்பு ஆரம்பித்த சில நாட்களில் நிராயுதபாணியான ஒரு குடிமகனைக் கொன்றதாக ரஷ்ய படை சிப்பாயான வாடிம் ஷிஷிமர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த படை சிப்பாயும், நான்கு படையினரும் சிற்றுாந்து ஒன்றை திருடி, பயணித்துக்கொண்டிருந்தபோது, ஈருருளியில் பயணித்த குடிமகன் ஒருவரை சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட ரஷ்ய படைச்சிப்பாய் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள அவருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில், ரஷ்யர்கள் இதுவரை 10,000 க்கும் அதிகமான போர்க்குற்றங்களை புரிந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் மொஸ்கோ இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது.
இருப்பினும் விசாரணையாளர்கள் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) முன்னிலைப்படுத்துவதற்காக சாத்தியமான போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
