சர்ச்சைகளுக்கு மத்தியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்த பிரதமர் ஹரிணி
பிரதமர் ஹரிணி அமரசூரிய,கண்டி மகாநாயக்க தேரர்களை சந்தித்து கல்வி சீர்திருத்தம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
அத்தோடு ஆறாம் தரத்திற்காக தயாரிக்கப்பட்ட முன்மாதிரி புத்தகம் ஒன்றில், தன்பால் பாலியல் தொடர்பாளர்களைத் தேடும் இணையதளத்தின் பெயர் ஒன்று அச்சிடப்பட்டிருந்தமை தொடர்பில் விளக்கி கூறியுள்ளார்.
பிரதமர் ஹரிணி தெரிவித்த கருத்து
அஸ்கிரி மகா விகாரையின் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை இன்று (08.01.2026) சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் தரம் ஆறு ஆங்கில பாட புத்தகத்தில் முதல் பதிப்பில் வெளிவந்த பிரச்சினை குறித்த உண்மையான விபரங்களை தெளிவுபடுத்தினார்.
மேலும் எதிர்காலத்தில் பாடப்புத்தகம் அச்சிடும் பொறுப்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் வழங்கப்படும். பிரச்சினைகளுக்குக் காரணமான தொகுதி எந்தக் குழந்தைக்கும் வழங்கப்படவில்லை.
மேலும் அனைத்து அச்சிடப்பட்ட பிரதிகளும் உள்ளக விசாரணைகள் முடியும் வரை சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.