அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இலங்கையருக்கு கிடைத்த உயரிய பதவி
இலங்கையைச் சேர்ந்த ரே ஜெயவர்தன அமெரிக்காவின் பணக்கார மற்றும் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றான கால்டெக்கின் அடுத்த பிரதானியாக தெரிவு செய்யப்படவுள்ளார்.
இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி மற்றும் வானியல் வல்லுநர் அல்லது வானியலாளர் (Astronomer) ஆவார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் அறிவியல் ஆராய்ச்சிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் விடுத்த அறிவிப்பு
பல்கலைக்கழகத்தின் செயற் குழு செவ்வாய்க்கிழமை காலை இந்த நியமனத்துக்கான அறிவிப்பை விடுத்துள்ளது.
ஏராளமான அறிவியல் சாதனைகளையும் பல நோபல் பரிசு பெற்றவர்களையும் உருவாக்கிய 134 ஆண்டுகள் பழமையான பல்கலைக்கழகத்தின் தலைவராக ரே ஜெயவர்தன ஜூலை 1 ஆம் திகதி பதியேற்கவுள்ளார்.

124 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பல்கலையில் 300 க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் சுமார் 2,400 மாணவர்கள் கற்கின்றனர்.