இரு கட்சிகள் இணைப்பு:சிறிகொத்தவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (07.01.2026) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பல சிறப்புத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள தகவல்கள்,
இரு கட்சிகளுக்கும் இடையில் தற்போதுள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இணைந்து பணியாற்ற செயற்குழு ஒப்புக்கொண்டது.
செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
இது தொடர்பான முதல் படியாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான கூட்டுத் திட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் பேச்சுவார்த்தை நடத்திய பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, பின்வரும் முன்மொழிவுகளை எடுத்துள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்கள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகளின் உறுப்பினர்களின் பணிகளை கூட்டாக முன்னெடுத்து செல்வதற்கு இரு கட்சிகளிலிருந்தும் ஒரு கூட்டு தேசிய திட்ட அமுலாக்கல் குழுவை நியமித்தல்.

செயற்குழுவினால் 3 ஒன்றிணைந்த திட்டங்களுக்கான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
தங்களுடன் இணைந்து செயற்படும் ஏனைய கட்சிகளுக்கும் குறிந்த இணைப்பு தொடர்பில் ,இரு கட்சிகளின் தலைவர்களின் ஒப்புதலுடன் ஒரு குழுவை நியமித்தல்.
இந்த திட்டங்களுக்கு இணங்கிய பின்னர் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் இருவர்களும் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.