கொழும்பில் பிரபல ஹோட்டலில் சந்தித்துக்கொண்ட முக்கிய அரசியல்வாதிகள்
கொழும்பில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசியல்வாதிகள் நேற்றிரவு (07) சந்தித்துள்ளனர்.
பந்துல குணவர்தன தயாரித்த திரைப்படத்தினை பார்வையிடுவதற்காக திரையரங்கொன்றில் சந்தித்துள்ளனர்.
இதன்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பல முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அரசியல் பிரச்சினைகள்
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் தொடர்பான பல பிரச்சினைகளை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து அரசியல்வாதிகள் கலந்துரையாடியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு மேலதிகமாக, கலாச்சார விவகார அமைச்சர் பேராசிரியர் சுனில் செனவி, விமல் வீரவன்ச, ரவூப் ஹக்கீம், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அனுர பியதர்ஷன யாப்பா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, சிசிர ஜயக்கொடி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது மேலும், பல கலைஞர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.