லசந்த விக்ரமதுங்க கொலை:மீண்டும் அரசு வெளியிட்ட நிலைப்பாடு
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க உட்பட சிரச மற்றும் ரூபவாஹினி நிறுவனங்களுக்கு நடத்திய தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் கட்டாயம் நீதியை நிலைநாட்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தொடர்பில் அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்தமைக்கு பதில் கூறும் வகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பிமல் வெளியிட்ட கருத்து
தொடர்ந்துரையாற்றிய அவர்,
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2008 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.அதற்கு பின்னர் வந்த அரசாங்கங்கள் கொலையாளிகள் மற்றும் அதற்கு உதவி செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என தெரிவித்தனர்.
அதெல்லாம் கடந்து 17 ஆண்டுகளின் பின்னரே நாம் இதற்கு தீர்வு காணவுள்ளோம். கொலையுடன் தொடர்புடையவர்கள் கடந்த காலங்களில் நாட்டில் ஆட்சியமைத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.ஆகவே, தவறிழைத்தவர்கள் மீது நிச்சயமாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.