வெனிசுலாவை எவராலும் ஆள முடியாது! பரபரப்புக்கு மத்தியில் ட்ரம்பிற்கு நேரடி சவால்
வெனிசுலா யாருக்கும் கட்டுப்படாத நாடு, வெனிசுலா அரசாங்கத்தால் ஆளப்படுகின்றது என வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆம் திகதிபோதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதத்தடை மீறல் குற்றச்சாட்டில் அமெரிக்க இராணுவத்தினரால் அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு நியூயோர்க் நகருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தல்
இந்நிலையில், நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால ஜனாதிபதியாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் பதவியேற்றார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் அரசு தொலைக்காட்சிக்கு ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்காவோ அல்லது வேறு எந்த கட்சியோ வெனிசுலாவை ஆள முடியாது. அமெரிக்க ஜனாதிபதி தன்னை தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தியதாகவும், தனது தலைவிதியை அமெரிக்கா அல்ல, கடவுளே தீர்மானித்ததாகவும், அதற்கு தான் பதிலடி கொடுப்பதாகவும் சவால் விடுத்துள்ளார்.
வெனிசுலா மக்கள் ஆன்மீக ரீதியாக வளர்ந்த மக்கள் என்றும், மிகவும் அமைதியானவர்கள் என்றும், வெனிசுலா மக்கள் வேறு யாரையும் தொந்தரவு செய்யாத மக்கள் என்றும் கூறியுள்ளார்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri