அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் திடீர் முடிவுகள்! அச்சத்தில் உலக நாடுகள்
வெனிசுலா மீதான தாக்குதலும், அந்த நாட்டு ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் கைப்பற்றியதும் சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது.
பல நாடுகள் இதற்கு கண்டனங்களை வெளியிட்டிருந்தாலும், அமெரிக்கா தன்னை உலகின் வலிமையான நாடு என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.
பல போர்களை நிறுத்தியவர் என்று மார்தட்டிக்கொண்டு நோபல் பரிசுகேட்ட ட்ரம்பின் இத்தகைய செயற்பாடுகள் பல விமர்சனங்களை சந்திருந்தாலும், உலகநாடுகள் ட்ரம்பின் இத்தகைய முடிவால் அச்சத்தில் உள்ளன எனலாம்.
இந்தநிலையில், ட்ரம்பை உலகநாடுகள் விமர்சித்திருந்தாலும் அவை வெளிப்படையானது இல்லை.
அவர்கள் அமைதிகாக்கின்றார்கள் என்பது இந்த விடயத்தில் புலப்படுவதாக கனடா அரசியல் ஆய்வாளர்கள் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி..
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri