இ.தொ.காவின் உப தலைவர் வேலு யோகராஜ் பதவி விலகல்: வெளியான அறிவிப்பு
உப தலைவர் பதவியிலிருந்து விலகல்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்து தான் இன்று முதல் விலகியுள்ளதாக வேலு யோகராஜ் உத்தியோகபூர்வமான இன்று மாலை அறிவித்துள்ளார்.
அத்துடன் தான் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணத்தை ஊடக சந்திப்பில் விளக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கந்தப்பளையில் பல கோடி ரூபாய் பெறுமதியான காணி ஒன்றில் இடம்பெற்ற மோசடி குறித்தும் அதில் வேலு யோகராஜ்க்கு தொடர்பு இருப்பதாகவும் சில விபரங்கள் வெளியாகியிருந்தன.
இதுதொடர்பாக அவரிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை குழுவினால் அவருக்கு எதிரான விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், 7 நாட்களுக்குள் அவர் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலே வேலு யோகராஜ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தமது உப தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.