வாகன இறக்குமதி மூலம் வருமானத்தை அதிகரிக்க திட்டமிடும் அநுர அரசாங்கம்
அடுத்த ஆண்டு, அரசாங்கம் வாகன இறக்குமதி மூலம் வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும், என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இறக்குமதி தளர்வு கொள்கையைத் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இருப்பினும், ஐந்து ஆண்டுகள் வரை பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் கோரிக்கை அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் பரிசீலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்தை அதிகரிக்க திட்டம்
வாகன இறக்குமதியிலிருந்து இந்த ஆண்டு வருமானம் சுமார் 650 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு 550 பில்லியன் வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த நிலையில், கடந்த பெப்ரவரியில் இறக்குமதி மீதான தடையை தளர்த்திய பிறகு, இதுவரை வாகன இறக்குமதியிலிருந்து பெறப்பட்ட வரி 450 பில்லியன் ரூபாய்களை தாண்டியுள்ளது.
அடுத்த ஆண்டு பாதீடு தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியதால், தற்போதுள்ள வரிகள் திருத்தப்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு, பாதீட்டில் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகளையும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வெசும நலத்திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.229 பில்லியனுடன் ஒப்பிடும்போது ரூ.240 பில்லியனை ஒதுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
மீன்பிடி, விவசாயம் மற்றும் தேயிலைத் துறைகளுக்கும் பாதீட்டில் சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சம்பள திருத்தத்தால் அரசாங்கத்திற்கு கூடுதலாக 100 பில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஏற்பவே பாதீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.





தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri

பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
